மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தை, சமூக தினமாக கொண்டாட ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்வே ஊழியர்களின் தன்னார்வ பணிகள், காந்தி பெயரில் சிறப்பு கண்காட்சி ஆகியவற்றை நடத்த ரயில்வே வாரியம்  திட்டமிட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் வரும் அக்டோபர் 2ம் தேதி கொண்டாப்படவுள்ளது. இதை முன்னிட்டு காந்தியின் கொள்கைகளை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பிரதமர் மோடி தலைமையில் நிர்வாக குழு கடந்தாண்டே  அமைக்கப்பட்டது. காந்தியின் 150வது பிறந்த ஆண்டை மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும் சிறப்பாக கொண்டாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி காந்தியின் 150வது பிறந்த தினத்தை சமூக நாளாக கொண்டா ரயில்வே வாரியம்  முடிவு செய்துள்ளது. இதற்கான செயல்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கு, ரயில்வே வாரியம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:வரும் அக்டோபர் 2ம் தேதியை சமூக தினமாக ரயில்வே கொண்டாட உள்ளது. ரயில்வே ஊழியர்கள் தன்னார்வ பணிகள் மேற்கொள்ளவுள்ளனர். தேசிய ரயில் மியூசியத்தில், ‘மோகன்தாஸ் முதல் மகாத்மா வரையிலான பயணம்’ என்ற  பெயரில் ஒரு வாரம் சிறப்பு கண்காட்சி நடத்தப்படவுள்ளது. ரயில்வேக்கு சொந்தமான இடங்கள் மற்றும் தண்டவாளத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் 150 சிறு தோட்டங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. ரயில்வேயின் மண்டல தலைமையகங்கள் மற்றும் பணிமனைகளில் காந்தி தொடர்பான வாசகங்கள் இடம் பெற வேண்டும். ரயில் பெட்டிகளுக்கு வெளியே உள்ள லோகோக்கள் பண்பாட்டு துறை அமைச்சகம் அனுமதிக்கும் லோகோ மூலம்  மாற்றம் செய்யப்படவுள்ளன. ரயில் பெட்டிகளுக்குள் தற்போது ஒட்டப்பட்டுள்ள சுற்றுலா போஸ்டர்களுக்கு பதில், காந்தி தொடர்பான வாசங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்ட வேண்டும். அரசுத் துறையின் சமூக ஊடங்கள் காந்தி பற்றி தகவல்களை அக்டோபர் 2ம் தேதி  முதல் ஓராண்டுக்கு தினந்தோறும் பரப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here