கூகுள் வரைபடம் தனது புதிய அம்சமான பொது நிகழ்வுகள் (Public Event) பிரிவை, அனைத்து பயனர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளது.

பொது நிகழ்வுகள் (Public Event) எனப்படும் அம்சமானது, அவரவர் இடத்தில் நடைபெறும் நிகழ்வுகளைப் பதிவேற்றவும், தாங்கள் இருக்கும் இடத்தில் பிறர் பதிவேற்றிய நிகழ்வுகளை எளிதில் தெரிந்துகொள்ளவும் முடியும்.

இதன் மூலம் பயனர்கள் தாங்கள் விரும்பிய, தங்களுக்கு அருகாமையில் நிகழும் நிகழ்வுகளை ஒரு நொடியில் அறிந்துகொள்ள முடியும்.

கூகுள் வரைபடம், திறன்பேசி பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக இருந்து வருகின்றது. அவ்வப்போது பயனர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப கூகுள் நிறுவனம் இச்செயலியை மேம்படுத்தி வருகின்றது.

இப்பயனர்களில் பங்களிப்பு மூலம், தாம் அறிந்த தகவல்களை வரைபடத்தில் பதிவேற்றிக்கொள்ள முடியும். இப்படி பெறப்படும் தகவல்கள் வேறு பயனர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு, தகவல்களின் நம்பகத்தன்மையை செயற்கை நுண்ணறிவு மூலம் கூகுள் உறுதிசெய்துகொள்ளும்.

இவ்வாறு மேம்படுத்தப்பட்ட கூகுள் வரைபடத்தில் ‘பொது நிகழ்வுகள்’ எனும் அம்சத்தைக் கூகுள் நிறுவியிருந்தது. அதை அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.

இப்போது பயனர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் கூகுள் அனைவரும் இந்த வசதியைப் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here