இரவில் நாம் தூங்கும்போது மூளை மற்றும் இதயம் தவிர மற்ற அனைத்து உறுப்புகளும் ஓய்வில் இருக்கும். அந்த சமயத்தில் அந்த உறுப்புகளுக்கு அதிக வேலை கொடுக்கும் படி நிறைய சாப்பிட கூடாது. எளிதில் செரிமானம் ஆகும் உணவை மிக குறைந்த அளவில் சாப்பிட வேண்டும்.

இந்த வகையில் இரவில் எந்த உணவுகள் சாப்பிட்டால் ஆபத்து என்பதை பார்ப்போம்

இரவில் கட்டித்தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கட்டித்தயிர் அதற்குமுன் சாப்பிட உணவையும் ஜீரணிக்க விடாமல் மந்தமான நிலையை ஏற்படுத்தும். இரவில் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட கூடாது. இது தூக்கமின்மையை அதிகரிக்கும். எண்ணெய் பலகாரங்களை இரவில் சாப்பிடும் போது சரியாக செரிமானம் ஆகாமல் வயிற்றில் gas உருவாகி உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

இரவில் சாப்பிட்டதற்கு பின்னால் டீ, காபி போன்றவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி தூக்கத்தை தாமதப்படுத்தும். கீரை மற்றும் பாகற்காயில் அதிக சத்துக்கள் இருந்தாலும் இரவில் சாப்பிட கூடாது இது செரிமானத்தை பாதிக்கும். இந்த உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்த்தாலே போதும் உடலில் ஏற்படும் பல நோய்களை தவிர்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here