தமிழகத்தில் உள்ள மூன்று கல்வ நிறுவனங்கள் உட்பட 6 கல்வி நிறுவனங்களில் நவீன தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் உட்பட பல புதிய படிப்புகளை வழங்க

அனுமதி வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதலின்படி, 6 கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்த பட்டப்படிப்புகள் அறிமுகம் ஆகின்றன.
கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (Machine Learning) தொடர்பான B.Voc படிப்புகளுக்கு ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள அமெட் பல்கலைக்கழகத்தில் பி.எப்.எஸ்.ஐ. துறையிலும் வங்கி மற்றும் பைனான்ஸ் சேவைகள் துறையிலும் B.Voc படிப்புகளை வழங்க

UGC அனுமதித்துள்ளது.

சென்னை சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மென்பொருள் உருவாக்குதல், இணைய தொழில்நுட்பம் ஆகியவற்றில் B.Voc படிப்புக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. மென்பொருள் உருவாக்குதல், ரேடியோ புரொடக்சன் மற்றும் ஹார்டுவேர் நெட்வொர்க்கிங் ஆகியவற்றில் M.Voc படிப்புக்கும் யுஜினி ஒப்பதல் தந்ததுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஜெயின் (நிகர்நிலை) பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங், காப்புரிமை, தனியார் வங்கிகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பாக சான்றிதழ் படிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here