வெளிநாடுகளில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய பிரதான தேர்வுகளில் ஒன்று, ஜி.ஆர்.இ., எனும் கிராஜுவேட் ரெகார்ட் எக்ஸாமினேஷன்ஸ்!

முக்கியத்துவம்
எஜுகேஷனல் டெஸ்டிங் சர்வீஸ் (இ.டி.எஸ்.,) எனும் அமைப்பு இத்தேர்வை நடத்துகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் இத்தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 
மேலாணமை, சட்டம் உட்பட புரொபஷனல் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் ஜி.ஆர்.இ., பொதுத்தேர்வை எழுத வேண்டும். இதுதவிர, பயாலஜி, கெமிஸ்ட்ரி, லிட்ரெச்சர் இன் இங்கிலிஷ், மேத்மெடிக்ஸ், பிசிக்ஸ் மற்றும் சைக்காலஜி என பாட வாரியாகவும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 
ஜி.ஆர்.இ., பொதுத் தேர்வு
வெர்பல் ரீசனிங்: ரீடிங் காம்ரிகென்ஷன், டெக்ஸ்ட் கம்ப்ளீசன், சென்டன்ஸ் ஈக்குவலன்ஸ் ஆகியவை சார்ந்த கேள்விகள் இடம்பெறுகின்றன. 
குவான்டிடேடிவ் ரீசனிங்: அடிப்படை கணித திறன்கள் பரிசோதிக்கப்படுகின்றன. குறிப்பாக, அர்த்மெடிக், அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி மற்றும் டேட்டா அனலிசிஸ் சார்ந்த கேள்விகள் கேட்கப்படுகின்றன.
அனலிட்டிக்கல் ரைட்டிங்: பொதுவாக கிரிட்டிக்கல் திங்கிங் மற்றும் அனலிட்டிக்கல் ரைட்டிங் திறன்கள் பரிசோதிக்கப்படுகின்றன. ஒரு பிரச்னையை புரிந்துகொள்ளும் திறன் மற்றும் உரிய கருத்துக்கள், உதாரணங்களுடன் வாதிக்கும் திறன் பரிசோதிக்கப்படுகிறது. இந்த இரண்டிற்கும் தலா 30 நிமிடங்கள் வீதம் ஒரு மணிநேரம் ஒதுக்கப்படுகிறது. 
தேர்வு காலம்: மொத்தம் 3.45 மணிநேரம் 
தேர்வு மையங்கள்
உலகளவில் 160 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கில மொழி வாயிலாக மட்டுமே நடத்தப்படும் இத்தேர்வுகளை ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். 
தேர்வு முறை
மாணவர்களின் விருப்பப்படி, கம்ப்யூட்டர் வாயிலாகவோ அல்லது காகிதம் வாயிலாகவோ இத்தேர்வை எழுதலாம். கம்ப்யூட்டர் தேர்வை 21 நாட்களுக்கு ஒருமுறையும், ஆண்டுக்கு 5 முறைகளும் எழுத அனுமதி உண்டு. காகித வடிவிலான தேர்வை மாணவர்களின் விருப்பப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம். தேர்வு மதிப்பெண்கள் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
விபரங்களுக்கு: www.ets.org/gre

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here