தமிழர் கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்கார வைத்து பரிமாறுவதுதான் நாகரீகம், சௌகரியம் என்றாகிவிட்டது. முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம். ஆனால் இப்போது டைனிங் டேபிள். இது சரியா தவறா?!!

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதன் நோக்கமென்ன? சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. எனவேதான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தப்பட்டது.

இனியாவது தினமும் ஒருமுறை குடும்பத்துடன் சம்மணமிட்டு அமர்ந்து உணவு உண்டு மகிழ்வோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here