40 வயதை தாண்டினாலே பல நோய்கள் நம்மை வந்து ஆக்கிரமித்து கொள்கின்றது. இதற்கு நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளும் காரணமாக அமைகின்றது. நமது பழங்கால உணவிலிருந்து சுக்கை பயன்படுத்திவருகிறோம். இது எத்தகைய உணவையும் செரிக்க வைத்துவிடும். அதுமட்டுமின்றி நச்சுக்களை முறித்துவிடும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தப்படுத்தும்.

தலையை இடிப்பது போல் தலைவலி வந்தால், சுக்கை நீரில் உரசி அதனை பற்றாக போட்டால் போதும். சில நிமிடங்களில் தலைவலி மறைந்துவிடும் 1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, நீரில்1 ஸ்பூன் சுக்குப் பொடியை கலந்து உடனே மூடி வைத்து வெதுவெதுப்பாக ஆறிய பின் அந்த நீரில் தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். இதனால் வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல், குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் வலி, குணமாகும்.

சுக்குப்பொடியை உப்புடன் சேர்த்து தினமும் காலையில் பற்களை விளக்கலாம். மேலும் ஈறுகளையும் இந்த பொடிக் கொண்டு மசாஜ் செய்தால் பல் கூச்சம், பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும். சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாதபோதும், மன அழுத்தம் இருக்கும்போதும் வாய்வுபிடிப்பு உண்டாகும். அந்த சமயத்தில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.
வாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here