தமிழகத்தில் பொறியியல்முதுலைப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் ஆகஸ்ட் 10 வரை நீட்டிக்கபட்டுள்ளது.

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் முதலான பொறியியல் முதுகலைப் படிப்புகளில் சேர மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்புகளில் சேர, கலந்தாய்வுக்கு விண்ணபிக்கும் அவகாசம் ஏற்கெனவே ஆகஸ்ட் 5ஆம் தேதியுடன் முடிந்தது.

ஆனால் இந்த அவகாசத்தை மேலும் 5 நாட்கள் நீட்டிதப்பதாக அறிவிப்ப் வந்துள்ளது அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை பொறியியல் முதுலைப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். http://annauniv.eduஎன்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் இதர அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டில் முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான இந்த கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

இளநிலை பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, டான்செட் (TANSET), கேட் (GATE) போன்ற தேர்வுகளில் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாவணவர், https://tanca.annauniv.edu/tanca19/ என்ற இணையதள முகவரிக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here