சென்னை : பி.ஆர்க். படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நாளை துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இதில் 83 ஆயிரத்து 396 இடங்கள் நிரம்பின. இதைத்தொடர்ந்து பி.ஆர்க். படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கை துவங்கியுள்ளது. 

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஆர்கிடெக் கல்லுாரிகளில் கவுன்சிலிங் வழியாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏற்கனவே முடிந்து விட்டது. தற்போது விண்ணப்ப பரிசீலனையும் முடிந்து கவுன்சிலிங் தேதி முடிவாகியுள்ளது. இதன்படி ஒற்றை சாளர முறையிலான கவுன்சிலிங் சென்னை தரமணியில் உள்ள மைய பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நாளை முதல் துவங்குகிறது. முதல் நாள் காலை சிறப்பு பிரிவினருக்கும் பிற்பகலில் பொது பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. ஆக., 7, 8ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்க உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here