அதிகபடியாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசை பிடிப்பு ஏற்படுவது வழக்கமான பிரச்னைதான்.  இந்த தசைப்பிடிப்பு நீண்ட நாட்கள் அல்லது சில மணி நேரங்கள் வரை இருக்கும்.  சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தசைப்பிடிப்பு ஏற்படும்.  சிலசமயங்களில் தசைப்பிடிப்பு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் ஏற்படும்.  நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களுமே தினமும் கிடைத்துவிடுவதில்லை.  ஆகையால ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.  தசைப்பிடிப்பை சரிசெய்ய உடலுக்கு பொட்டாஷியம் மிகவும் தேவையான ஒன்று.  தசைகளுக்கும் நரம்புகளுக்கும் இடையேயான சீரற்ற தன்மையை போக்க பொட்டாஷியம் பயன்படுகிறது.  தசைப்பிடிப்பை சரிசெய்ய இந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.  

தண்ணீர்: 
உடலில் நீரிழப்பு ஏற்படும்போது தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  தினமும் 8-10 க்ளாஸ் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.  இது உங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்து கொள்ளும்.  அதுபோக, இளநீர் மற்றும் எலுமிச்சை சாறு குடித்து வரலாம்.  

வாழைப்பழம்: 
வாழைப்பழத்தில் பொட்டாஷியம் அதிகமாக இருப்பதால் இது தசைகளையும் நரம்புகளையும் வலுவாக்குகிறது.  வாழைப்பழத்தில் கால்சியம் மற்றும் மக்னீஷியம் இருப்பதால் தசைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: 
இதிலும் பொட்டாஷியம், கால்சியம், மக்னீஷியம் ஆகிய சத்துக்கள் இருக்கிறது.  உருளைக்கிழங்கு, பூசணிக்காய் ஆகியவற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.  இந்த காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்

பருப்பு வகைகள்: 
பருப்பு வகைகளில் நார்ச்சத்து மிகுதியாக இருக்கிறது.  மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வயிற்று வலியை சரிசெய்யவும், இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் பயன்படுகிறது.  

நட்ஸ்: 
புரதம் மற்றும் மக்னீஷியம் நிறைந்த உணவுகளில் நட்ஸ் மிகவும் முக்கியமானவை.  மேலும் இதில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இருக்கிறது.  பருப்பு வகைகள், நட்ஸ், விதைகள், முழுதானியங்கள், வாழைப்பழம், கீரைகள் ஆகியவற்றை சாப்பிட்டு வருவது நல்லது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here