ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன் 2 விண்கலம் முதல்முறையாக பூமியை படம்பிடித்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. orbiter, lander மற்றும் rover என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம், 20 மணி நேர கவுன்டவுன் கடந்த 21-ம் தேதி மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து, கடந்த 23-ம் தேதி மதியம் சரியாக 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் பூமியின் வட்டப் பாதையை 16 நிமிடங்களில் சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர். சந்திராயன் -2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விண்கலம் நேற்று மாலை பூமியை படம் எடுத்துள்ளது. இந்தப் படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பூமியின் படம். இது சந்திரயானின் எல்.ஐ4  கேமராவில் நேற்று மாலை 5.34 மணிக்கு படம் பிடிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here