பூவரசம்: பூவரசம் மரத்தின் பழுப்பு இலைகளை எடுத்து தீயில் இட்டு சாம்பலாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தோலில் அரிப்பு இருக்கும் இடத்தில் பூசினால் பிரச்னை சரியாகும். பூவரசு அற்புதமான மருந்தாக விளங்குகிறது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்க  கூடியது. ஒவ்வாமையை போக்கவல்லது.

அருகம்புல்: காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்துவர ரத்தம் சுத்தமாகும். சர்க்கரை நோயை தணிக்க கூடியதாக உள்ளது.  இதில் உள்ள புரதச்சத்து உடலுக்கு பலம் தரும்.

மருதாணி: மருதாணி நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நோயை தணிக்கும் தன்மை கொண்டது. நகங்களுக்கு மேல்பற்றாக போடுவதால் நகச்சொத்தை நீங்கும். நகத்துக்கு நல்ல வண்ணம், பாதுகாப்பு, அழகை கொடுக்க கூடியதாகிறது. உடல் குளிர்ச்சி  பெறும். தோல்நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. வெள்ளைப்போக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது.

துத்தி இலை: துத்தி இலைகளுடன் சிறிய துண்டு மஞ்சள் சேரத்து தண்ணீர் சேரத்து அம்மியில் வைத்து அரைக்கவும். பிறகு அரைத்ததை  பசும்பாலில் சேர்த்து கலக்கி காலை உணவுக்கு முன் 5 நாடகள் குடிக்கவும். மூலம் தீரும்.

சதுரக்கள்ளி: சதுரக்கள்ளியை இடித்து, சாறெடுத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி பதத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை தோலில் சொறி,  சிரங்கு உள்ள இடங்களில் தடவி வரலாம். மிளகை சதுரக்கள்ளி சாற்றில் ஊறவைத்து, வெயிலில் நன்கு உலர்த்தி, நல்லெண்ணெயில்  மூழ்கும்படி பத்து நாட்கள் வைத்திருந்து அந்த எண்ணெயை தலையில் தேய்த்துவர பொடுகு, தலை அரிப்பு நீங்கும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here