அழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு எண்ணெய் மிக முக்கியம். எந்தெந்த எண்ணெய்கள் தலைமுடிக்கு நல்லது, அவற்றை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

* அழகான கூந்தலுக்கு நல்லெண்ணெய்யை பயன்படுத்தி உச்சந்தலையில் கால் மணி நேரம் ஊறவிட்டு குளித்தால், உச்சந்தலைக் குளிர்ந்தால், உடல் சூடு தணிந்துவிடும். உடல் சூடு தணிந்தால், முடி உதிர்வது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்

சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், நல்லெண்ணெயை லேசாகச் சுடவைத்து, அதில் ஒரு பூண்டு பல், இரண்டு மிளகு போட்டு பொரிய விடுங்கள். இது ஆறியதும், கூந்தலின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து, ஷாம்புவோ அல்லது சீயக்காயோ பயன்படுத்தி தலைக்குக் குளித்து வரலாம்.

* தலைக்கு ஆலிவ் ஆயில் தடவுவதால் கறுப்பாக்கும் தன்மைகொண்டது. இதில் உள்ள இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், லேசாகச் சூடாக்கி தலையில் ஊறவைத்துக் குளியுங்கள். சூடாக்கப்பட்ட ஆலிவ் ஆயிலை நன்கு ஆற வைத்து தலைமுடி, புருவம் போன்ற இடங்களில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளியுங்கள்.

தேங்காய் எண்ணெயை ஒருநாள் விட்டு ஒருநாள் வேர்க்கால்களில் தடவி, சீப்பால் வாரிவிடுங்கள். கூந்தல் உடையாமல், சிக்கு விழாமல் இருப்பதற்கு வெளிப்புற பூச்சாகத் தேங்காய் எண்ணெய் தடவுவது ரொம்பவே அவசியம். இதில் ஏற்படும் சிக்கு வாடையை போக்க மருக்கொழுந்து, மருதவனம், செண்பகப்பூ போன்றவற்றை உலர வைத்து எண்ணெய்யில் போட்டு உபயோகப்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here