ராஜ்யசபாவில் உறுப்பினர் சுப்பிராமி ரெட்டி இது குறித்து பேசினார். தொடர்ந்து அவர் கூறியதாவது: புதுடில்லியில் போதை பொருள் மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போதைக்கு அடிமையாகி உள்ளனர். புதுடில்லி மட்டுமல்லாது வட இந்திய மாநிலங்களிலும் குழந்தைகள் போதைக்கு அடிமையாகி உள்ளனர். இது குழந்தைகளின் வாழ்க்கையை அழிப்பதாக உள்ளது.

போதை பொருட்களுக்கு அடிமையானவர்களில் 83 சதவீதம் பேர் படித்தவர்களாக இருக்கின்றனர்.இ ந்த பிரச்னையை கட்டுப்படுத்த மாநில அரசு எந்தஒரு நடவடிக்கையையும் எடுக்க வில்லை.

இந்தவிவகாரம் குறித்து ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேச மாநில முதல்வர்களால் விவாதிக்கப்பட்டது. போதை பொருட்கள் பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வருகிறது. இதனை கட்டுப்படுத்த தேசிய புலனாய்வு அமைப்புடன் பிற ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைப்பு தேவை என அவர் கூறினார்.

மற்றொருபிரச்னையை எழுப்பிய பிரபாகர் ரெட்டி சட்டவிரோதமாக உறுப்பு வர்த்தம் செய்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதயம் போன்ற உறுப்புகள் வர்த்தகத்திற்கான மிக பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து உள்ளது. இது போன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மசோதா இருக்க வேண்டும் என கூறினார்.

உடல் ஊனமுற்றவர்கள் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கு அவர்களுக்கான அளவீடை 80 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்க வேண்டும். இதன்மூலம் ஏராளமானோர்பயன் பெறுவர் என திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.,மனஸ் ரஞ்சன் புனியா கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here