உலகத்தில் அதிக நபர்களால் விரும்பி குடிக்கப்படுவது என்றால் அது காபிதான். காபி குடிக்காத நாள் முழுமை பெறாத நாள் என்று நினைப்பவர்கள் கூட இருக்கத்தான் செய்கின்றனர். ஒரு நாளைக்கு கணக்கில்லமால் காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர். அதற்கு காரணம் காபியில் இருக்கும் உற்சாகம் அளிக்கும் குணமாகும்.

காபியில் அதிக ஆரோக்கிய பலன்கள் இருந்தாலும் அதில் சில பக்க விளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது. அதிக அளவில் காபி

குடிப்பதோ அல்லது ஆரோக்கியமற்ற முறையில் தயாரிக்கும் காபியை குடிப்பதோ உங்கள் உடலில் பல பிரச்சினைகளை உண்டாக்கும்.

ஆரோக்கியமான காபி என்பது இங்கிருந்துதான் தொடங்குகிறது. வழக்கமான காபி பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகளால் நிறைந்துள்ளது. எனவே இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காபி பொடியை உபயோகிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. பெரும்பாலும் உள்ளூர் தயாரிப்புகளை உபயோகிப்பது உங்கள் காபிக்கு அதிக ஆரோக்கியத்தை சேர்க்கும்.

இந்த பழக்கம் பலருக்கும் இருக்கும் ஒன்றாகும். தினமும் காலையில் காலை உணவை தவிர்த்து விட்டு வெறும் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். காபி குடிப்பது பசியை கட்டுப்படுத்தும், அதனால் அதனை உணவுக்கி மாற்றாக பலர் உபயோகிக்கிறார்கள், ஆனால் இது ஆரோக்கியமான பழக்கமல்ல. காலை உணவிரு பிறகு காபி குடிக்கலாம் ஆனால் காபியே காலை உணவாக இருப்பது ஆபத்தானதாகும்.

பெரும்பாலும் வீட்டில் காபி குடிப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். கடைகளில் குடிக்கும் காபி சுவையானதாக இருந்தாலும் அதில் ஆபத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். இந்த வகை பாக்டீரியாக்கள் உங்களின் குடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

மிதமான அளவில் காபி குடிப்பது ஆரோக்யமானதுதான். அதிகளவு காபி குடிப்பது அதனால் ஏற்படும் நன்மைகளை தடுக்கும். சராசரியாக ஒரு கப் காபியில் 96மிகி காஃபைன் உள்ளது, ஒருநாளைக்கு இரண்டு கப் காபி குடிப்பது உங்களுக்கு எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. ஆனால் ஒருநாளைக்கு 400 மிகி அளவிற்கு அதிகமாக காஃபைன் எடுத்துக் கொள்வது உங்களுக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here