சென்னை: தேர்தலின் போது, வெளியூர்களில் இருப்போர், ‘ஆதார்’ எண் அடிப்படையில், ஓட்டு போடும் கருவியை, சென்னை அரசு பள்ளி மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர். அவர்களுக்கு, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன், தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளார்.அரசு பள்ளி மாணவர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னேறும் வகையில், ‘ரோபாட்டிக்’ எனப்படும் இயந்திர மனித தொழில் நுட்ப வகுப்புகள், நவீன அறிவியல் ஆய்வகம், அடல், ‘டிங்கரிங்’ ஆய்வகம் போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

விருது

 

அதேபோல, ‘இன்ஸ்பையர்’ விருது, மத்திய அரசின் அறிவியல் விருது போன்றவையும், மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.இந்த திட்டங்களால், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, ‘பதிப்பக செம்மல்’ கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும், பிரதீப் குமார், பிளஸ் 1 மாணவர் ஜெபின், பிளஸ் 2 மாணவர், ஜெயச்சந்திரன் ஆகியோர், ஆதார் அடிப்படையில் செயல்படும், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.தேர்தலின் போது, வெளியூர்களில் உள்ளவர்கள், தங்களின் ஆதார் எண், கருவிழி பதிவுகளின் வழியாக, ஓட்டுகளை பதிவு செய்வதற்கான, நவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, மத்திய அரசின், அறிவியல் தொழில்நுட்ப துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பை, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பாராட்டி, மாணவர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கிஉள்ளார். பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவின்படி, முதன்மை கல்வி அதிகாரி, திருவளர் செல்வி, மாணவர்களை சந்தித்து, பரிசு வழங்கினார்.கண்டுபிடிப்பு குறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியை, தமிழரசி கூறியதாவது:கடந்த, 2017 முதல் எங்கள் பள்ளியில், ரோபாட்டிக் ஆய்வகம் உள்ளது; அடல் டிங்கரிங் ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, படிப்பில் பின்தங்கியவர்களும், தங்கள் அறிவியல் திறமைகளை வெளிக்காட்டுகின்றனர். மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று, தங்கள் கண்டுபிடிப்புகளை காட்டி, பரிசுகளை பெற்றுள்ளனர்.

ஆங்கிலம்

 

இதற்காக, அவர்களுக்கு ஆங்கிலமும் கற்று தரப்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள், தங்கள் கண்டுபிடிப்புகள் குறித்து, ஆங்கிலத்திலேயே விளக்கம் அளிப்பர்.இதற்கு, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் ஊக்குவித்தல் காரணம். சில தனியார் நிறுவனங்களும், அரசின் அனுமதியுடன் மாணவர்களின் கற்பித்தல் மற்றும் கண்டுபிடிப்பு திட்டங்களுக்கு உதவுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here