பாரம்பரியம், பண்பாடு மற்றும் நவீனத்துவம் என இந்தத் துறை விரிவடைந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இளைஞர்களும், இளம் பெண்களும் பேஷன் படிப்புகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கற்பனைவளம், படைப்புத்திறன் மிக்கவர்கள் இந்தத் துறையில் மிகப்பெரிய அளவில் சாதிக்க முடியும்.
காலத்தின் தேவை மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப நவீன பாடங்களும், பாடத்துறைகளும் இந்தப்பிரிவில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள மத்திய பேஷன் கல்வி நிலையமான ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி (நிப்ட்-NIFT)’ கல்வி மையத்தில் ஏராளமான பேஷன் படிப்புகள் வழங்கப்படுகிறது. தற்போது முழு நேர டிப்ளமோ மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு நடந்து வருகிறது. இதில் புதிதாக 2 படிப்புகளும் அறிமுகமாகி உள்ளன.
பேஷன் பிட் அண்ட் ஸ்டைல், டெக்ஸ்டைல் கேட், அப்பேரல் புரொடக்சன் மற்றும் மெர்ச்சண்டைசிங் (முதுநிலை டிப்ளமோ-1 ஆண்டு) போன்ற படிப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத் தேவை மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப 2 புதிய டிப்ளமோ படிப்புகளை நிப்ட் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதில் பேஷன் அண்ட் ரீடெல் ஸ்டோர் ஆபரேஷன்ஸ் படிப்பு 2 ஆண்டு காலத்தை கொண்டது. இது சில்லறை வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டங்களைக் கொண்டதாகும். பேஷன் தயாரிப்புகளை கடைக்கோடி பயன்பாட்டாளர்களிடம் கொண்டு சேர்க்கும் சில்லறை வணிக கடைகளுடன் இணைப்பு ஏற்படுத்தும் புதிய பாடத்திட்டமான இது எதிர்கால வாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாகும்.
இதேபோல காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முதுநிலை ஓராண்டு படிப்பும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு உள்ளது. சிறுகுறுதொழில் பயிற்சி மையத்தில் வழங்கப்படுவது போன்ற இந்த படிப்பு நிப்ட் கல்வி மையத்திலும் அறிமுகமாகி இருப்பது சிறப்புக்குரியது. மதிப்பையும், நல்வாய்ப்புகளையும் பெற்றுத் தரக்கூடியது. இந்த படிப்புகளுக்கு முழுநேரமாக, வார நாட்களில் தினமும் 6 மணி நேரம் வகுப்புகள் நடக்கும்.
2 ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பிளஸ்-2 முடித்திருக்க வேண்டும். நான்காண்டு பட்டப்படிப்பில் டிப்ளமோ படித்தவர்கள் லேட்டரல் என்ட்ரி மூலம் சேர முடியும். முதுநிலை டிப்ளமோவில் சேர ஏதாவது ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு முதல் 3 ஆண்டு கள் பணி அனுபவம் அவசியம். இரண்டு படிப்புகளுக்கும் வயது வரம்பு கிடையாது. எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும் பேஷன் டிசைன் துறையில் ஆர்வம் இருந்தால் சேர்ந்து படிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.300-க்கான டி.டி. இணைத்து அனுப்பி விண்ணப்பம் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்னை தரமணியில் உள்ள நிப்ட் கல்வி மைய முகவரியை ஆகஸ்டு 9-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இவை பற்றிய விவரங்களை www.nift.ac.in.chennai என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here