சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை ஆகஸ்டு 11ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. மத்திய பள்ளிக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த 7ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 20 லட்சத்து 84 ஆயிரத்து 174 பேர் எழுதினர். நாடு முழுவதும் 20 மொழிகளில் 104 நகரங்களில் இந்த தேர்வு நடந்தது.

தேர்வு எழுதியவர்களில் 37 ஆயிரம் பேர் காது கேளாமை மற்றும் பேச இயலாதவர்கள். இதைத் தொடர்ந்து மேற்கண்ட தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைக் குறிப்பு கடந்த 26ம் தேதி சிபிஎஸ்இ இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை ஆகஸ்டு 11ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. தேர்வு எழுதிய நபர்கள் www.ctet.nic.in என்ற இணைய தளத்தில் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளவும் சிபிஎஸ்இ ஏற்பாடு செய்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here