சென்னை: உலக நாடுகளில் முதன் முறையாக நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திராயன்-2 விண்கலம் கடந்த 22ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. அதன்படி, பூமியில் இருந்து புறப்பட்ட 16 நிமிடம் 24 விநாடிகளில் சந்திராயன்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் அதன் புவியின் சுற்றுவட்டப்பாதையில் திட்டமிட்டபடி நிலை நிறுத்தியது. இதையடுத்து, கடந்த 24ம் தேதி சந்திராயன்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை முதல் முறையாக உயர்த்தப்பட்டது. பின்னர், கடந்த 26ம் தேதி விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 2வது முறையாக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை சீரான வேகத்தில் உயர்த்தும் செயல்பாட்டில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். 

அதன்படி, நேற்று மதியம் 3.12 மணிக்கு புவியின் சுற்றுவட்டப்பாதையை 2வது நிலையில் முடித்துக்கொண்டு 3வது நிலைக்கு சந்திராயன்-2 விண்கலம் உயர்த்தப்பட்டது. குறைந்தது 276 கி.மீட்டர் தூரமும், அதிகபட்சம் 71,792 கி.மீட்டர் தூரமும் இதன் பயணம் இருக்கும். இதேபோல், இன்னும் 3 முறை சந்திராயன்-2 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்படும். இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 2ம் தேதி விண்கலம் பூமியின் 4வது சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. அதன் செயல்பாடுகள் திட்டமிட்டபடி சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், திட்டமிட்டபடி சந்திராயன்-2 விண்கலம் பயணிக்கும் பட்சத்தில் வரும் செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறக்கப்படும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here