சென்னை: 4 சுற்று இணையவழி கலந்தாய்வுக்கு பின் 90 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்த நிலையில், பிளஸ்2 சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது.இன்ஜினியரிங் கலந்தாய்வின் 4 சுற்றுகள் முடிவில் 90 இடங்கள் காலியாக உள்ளது. இந்த ஆண்டு 494 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 இடங்கள் கவுன்சலிங்குக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 101 இடங்களுக்கு மட்டுமே கவுன்சலிங் நடத்தப்பட்டுள்ளது. மே 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 166 பேர் மட்டுமே இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர்.  அதிலும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 418 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். அதில் தகுதியுள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 150 பேர் கொண்ட பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட்டது. ஜூலை 3ம் தேதி முதல் 4 சுற்றுகளாக இணையவழி கலந்தாய்வு நடந்தது. 

அதில் தரவரிசையில் முதல் 1 லட்சத்து ஆயிரத்து 692 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கவுன்சலிங் தொடங்குவதற்கு முன்னரே 70,456 இடங்களில் சேர ஆளில்லை. 4 சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், மொத்த இடங்களில் 76,364 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. அது மொத்த இடங்களில் 46 சதவீதம். 90,737 இடங்கள்ள(54 சதவீத இடங்கள்) நிரம்பவில்லை. 16 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை.  13 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. 67 சதவீத கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் கூட நிரம்பவில்லை. இன்ஜினியரிங் கல்வியை பொறுத்தவரை ஏற்கனவே மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பொதுக்கலந்தாய்வுக்குபின் ஒரு லட்சம் இடங்கள் காலியாக உள்ளதாக இருந்து, பின்னர் துணை கலந்தாய்வு, காலியாக உள்ள எஸ்சி, எஸ்சிஏ இடங்களுக்கான கலந்தாய்வு அவற்றில் சில இடங்கள் நிரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அரசுத்தரப்பில் இன்ஜினியரிங் கல்லூரிகள் தொடங்க ஊக்குவித்து வந்ததும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.ஜூலை 28ம் தேதி தொடங்கிய மாணவர் பிளஸ்2 சிறப்பு துணைத்தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு, காலியாக உள்ள எஸ்சி, எஸ்சிஏ இடங்களுக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here