பொன்னேரி: மெதூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையின் செயல்பாடு பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், மெதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு  மாணவர் காவல்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.

இதில் தற்காப்பு கலைகள், ஒழுங்குமுறை நடவடிக்கைகள், ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் உளப்பட பல பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன்  ஆலோசனையின்படி, வெளிப்புற அனுபவங்களை பகிரிந்துகொள்ள திருப்பாலைவனம் காவல் நிலையம் முன் மாணவர் காவல் படை மாணவர்கள் அணிவகுப்பு நடந்தது. அப்போது காவல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.

ஏட்டு கோபி பிரபாகரன் ஆலோசனை வழங்கினார். பொன்னேரி இன்ஸ்பெக்டர் பால்ராஜ், எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர் சண்முகம் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு காவல்துறையின் செயல்பாடு குறித்து பயிற்சி அளித்தனர்.

அப்போது மாணவர்களின் சந்தேகங்களுக்கு போலீசார் பதில் அளித்தனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here