சென்னை: தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை தொடங்கியது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 7ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

ஜூலை 6ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவ மாணவர் சேர்க்கை தரவரிசைப்பட்டியலை வெளியிட்டார். 

ஜூலை 8ம் தேதி முதல் 13ம் ேததி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடந்தது.

அதன் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீடு எம்பிபிஎஸ் இடங்கள், அரசு, நிர்வாக பிடிஎஸ் இடங்களுக்கு தனித்தனியே கலந்தாய்வு நடந்தது. அதன்பின் தற்போது 2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

2 சுற்று ஆன்லைன் கலந்தாய்வுக்குபின், 150 இடங்களை மத்திய கவுன்சலிங் கமிட்டி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. அதன்படி மாணவர்கள் சேராத இடங்கள், மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ள இடங்கள் சேர்த்து 2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வுக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் 146 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 117 இடங்கள், அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் 16 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வுக்கு இன்று தொடங்கி ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடக்கிறது.

இன்றைய கலந்தாய்வுக்கு தரவரிசையில் முதல் 2,351 இடங்களை பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here