சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸஸ் பதவிக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வு 5 நாட்கள் நடக்கிறது.

இத்தேர்வுக்கு வருகிற 1ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு. பி. எஸ். சி. )ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்துகிறது.

இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 896 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 19ம் தேதி அறிவித்தது. இத்தேர்வுக்கு சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஜூன் 2ம் தேதி நடந்தது.

தொடர்ந்து கடந்த 12ம் தேதி முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் 11,845 பேர் தேர்ச்சி  பெற்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை 610 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் மெயின் தேர்வு செப்டம்பர் 20ம் தேதி தொடங்கும் என்று யு. பி. எஸ். சி அறிவித்துள்ளது. 

இது குறித்து சங்கர் ஐ. ஏ. எஸ்.

அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். டி. வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வுக்கு வருகிற 1ம் தேதி முதல் 16ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு upsconline. nic. in என்ற ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்ந்து செப்டம்பர் 20ம் தேதி மெயின் தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடக்கிறது. 
முதல் நாளான 20ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை முதல் தாள் தேர்வு(கட்டுரை வடிவிலானது) நடக்கிறது.

தொடர்ந்து 21ம் தேதி காலை இரண்டாம் தாள்(பொது அறிவு 1), மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும் நடக்கிறது. 22ம் தேதி காலையில் 4ம் தாள்(பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு4), 28ம் தேதி காலையில் இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, பிற்பகலில் ஆங்கிலம் தேர்வும் நடக்கிறது.

கடைசி நாளான 29ம் தேதி காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. 

இந்தியா முழுவதும் 24 நகரங்களில் மெயின் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடைபெறுகிறது.

மெயின் தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் அல்லது ஜனவரியில் ெவளியிடப்படும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here