சோடா குடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில், சோடாவில் ஊட்டச்சத்துக்கள் கிடையாது.

* மேலும், அதில், ‘பாஸ்பாரிக் ஆசிட்’ உள்ளதால், அது உடலில் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவைக் குறைக்கும். நோயெதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது.

தொடர்ந்து குடித்து வர, உடலின் உட்புறத்தில் பல உறுப்புகளின் செயல்பாட்டிற்கு இடையூறை ஏற்படுத்தும்.

* அளவுக்கு அதிகமான சர்க்கரை, சரும செல்களை பாதித்து, சருமத்தின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். விரைவில் முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்தும்.

சோடாக்களில் கலோரிகள் அதிகம் இருக்கிறது. இப்படி கலோரிகள் நிறைந்த சோடாவைக் குடித்தால், உடல் பருமன் அதிகரிக்கும்.

* சோடா குடிப்பதால் முக்கியமாகப் பற்சிதைவும், பல் சம்பந்தமான நோய்களும் ஏற்படும்.

* எலும்புகளில் இருக்கும் கால்சியம் சத்தை தளரச் செய்திடும். இதனால் கை கால்களில் வலி மற்றும் மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here