இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள JR Technical Associate (Electrical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

JR Technical Associate (Electrical) பிரிவில் 05 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது பொறியியல் துறையில் படித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு:

33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பெண்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணம் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.cr.indianrailways.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின் விண்ணப்பித்ததை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்களையும் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Sr.DFM/SUR, Central Railway,

Divisional Railway Manager’s Officer,

Modikhana, Solapur – 413 001.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2019

பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 14.08.2019

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here