தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சி பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் இரண்டாண்டு கால உதவி செவிலியர் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன

அதில் சேருவதற்கு சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களின் வாரிசுகளுக்கும், மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம். தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் வரும் 31-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here