4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம் – அமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் பணிக்கான பட்டப்படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்” என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நேற்றுஅறிவித்தார்.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான ரமேஷ் பொக்கிரியால் ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது:

ஆசிரியர் பணிக்கான பி.எட். படிப்புக்கு ஒருங்கிணைந்த புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நான்காண்டு படிப்பாக இருக்கும். ஏற்கனவே பி.எட். படிப்புக்கான காலம் ஐந்தாண்டுகளாக உள்ளது. இந்த புதிய முறை மூலம் மாணவர்களுக்கு ஒரு ஆண்டுமீதமாகும். இதன்படி பி.ஏ. – பி.எட். மற்றும் பி.எஸ்சி. – பி.எட். மற்றும் பி.காம். – பி.எட். என மூன்று பாடங்களில் மாணவர்கள் எதையாவது ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம்.

நடப்பு கல்வியாண்டிலேயே இந்த முறையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பாடத் திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும்.ஆசிரியராக பணியாற்றும் அனைவரும் அதற்குரிய பயிற்சியை முடித்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 வரை நாடு முழுவதும் ஏழு லட்சம் ஆசிரியர்கள் பயிற்சியை முடித்துள்ளனர். ஆனால் இன்னும் பலர் இந்த பயிற்சியை முடிக்கவில்லை. ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படுவோர் அதற்கான குறைந்தபட்ச தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்றும் அதற்கான வரையறையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகள்கூறுகின்றன.

இதன் அடிப்படையில் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வழிகாட்டும் விதிமுறைகளைவெளியிட்டுள்ளது. இதன்படி சம்பந்தபட்ட மாநில அரசுகள் ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here