இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 31ஆம் தேதி முதல் சான்றுகளைப் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி, மார்ச் மற்றும் மே மாதங்களில் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்களுக்கு சான்று சரிபார்ப்புப் பணி தொடங்குவுள்ளதாகவும் சான்றுகளை பதிவேற்றம் (Upload) செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

2017-2018ஆம் ஆண்டுக்கான 105 அறநிலையத்துறை செயல் அலுவலர் (கிரேடு III) காலி பணியிடங்களைப் நிரப்புவதற்கான தேர்வு கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி நடந்தது. 46,316 பேர் பங்கேற்ற இத்தேர்வின் முடிவுகள் டின்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

செயல் அலுவலர் பணிக்கு தேர்ச்சி பெற்ற 55 பேரும் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தேவையான சான்றுகளை அப்லோட் செய்ய வேண்டும். அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை சான்றுகளைச் சமர்ப்பிக்கலாம்

இத்துடன் கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி நடந்த தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பதவிகள் 9, உதவிப் பொறியாளர் பணிகள் 32 ஆகியவற்றுக்கு தேர்வான 91 பேரும் இதேபோல (31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை) சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்

2018-2019ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிலவியல் மற்றும் சுரங்க துறையில் உதவி நிலவியலாளர், புவியியலாளர் பதவிகளுக்கான 16 காலிப் பணியிடங்களை நிரப்ப நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 சான்றுகளை சமர்ப்பிக்கலாம் (31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை). கடந்த மே 5ஆம் தேதி நடத்த இத்தேர்வில் 516 பேர் பங்கேற்றனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here