நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதையொட்டி தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கை, சமீபத்தில் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கல்வி முறை பல்வேறு மாநிலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பாக தமிழகத்தில் காலங்காலமாக இந்தி எதிர்ப்பு உணர்வு இருந்து வருகிறது
இதற்காக திராவிடக் கட்சிகள் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தி, இந்தி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, மும்மொழிக் கொள்கை கட்டாயப்படுத்தப் படாது என்று மத்திய அரசு உறுதியளித்தது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தமிழின் தொன்மை குறித்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தின் 142வது பக்கத்தில் சில மொழிகளின் பெயர்கள் மற்றும் அவை தோன்றிய ஆண்டுகள் இடம்பெற்றுள்ளன.

அவற்றை ஆண்டு வாரியாக வரிசைப் படுத்துமாறு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதில் தமிழ் கி.மு 300 முதல் வழக்கத்தில் இருப்பதாகவும், சமஸ்கிருதம் கி.மு 2000 முதல் வழக்கத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தான் மிக மூத்த மொழி என்பதற்கான வரலாற்று சான்றுகள் ஏராளம் கிடைத்துள்ளன. இவற்றைத் தான் இளம் தலைமுறையினரிடம் நாம் கற்பித்து வருகிறோம்.

இந்நிலையில் தமிழை விட சமஸ்கிருதம் தான் பழமையான மொழி என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here