பூச்சி கொல்லி மருந்து அடிப்பது கூட மூளையை பாதிக்குமாம்? வாங்க தெரிஞ்சுக்கலாம் பூச்சிக் கொல்லிகளில் நிறைய நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல்கள் உள்ளன. பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க இதை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் இந்த பூச்சிக் கொல்லிகளின் தீவிரம் மனிதர்களையும் விடுவதில்லை. அவர்களுக்கும் நிறைய உடல் நல பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது.

பூச்சிக் கொல்லிகளில் கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பூச்சிகளை விரட்ட, அழிக்க மற்றும் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்களில் இது பூச்சிகளை அழிப்பதோடு தேவையற்ற களைகளை அழிக்கவும், பூஞ்சைகளை அகற்றவும், மைக்ரோ உயிரினங்களை அழிக்கவும், எலிகள், பறவைகள் போன்றவற்றை விரட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் தீவிரம் பூச்சிகளை மட்டுமல்ல அதை அடிக்கும் மனிதர்களையும் தாக்குகிறது.

விவசாய நிலங்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகள் மனிதர்களை பெருமளவில் பாதிக்கிறது. வனவியல் மற்றும் உள்நாட்டு பூச்சி கட்டுப்பாடு வாரியத்தின் படி ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள், மரப் பாதுகாப்பு போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகளும் பாதிப்பை உண்டாக்குகிறது என்கிறார்கள். அதே மாதிரி பார்க், விளையாட்டு மைதானங்கள், நடைபாதைகளில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் மனிதர்களை பெருமளவில் பாதிக்கிறது. பூங்கா போன்றவற்றில் உணவுகளை கொண்டு சென்று சாப்பிடுவது கூட அபாயமானது என்கிறார்கள்.

இதைத் தவிர மலேரியா, டெங்கு போன்று கொசுக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் நாள்பட்ட உடல் நல பாதிப்புக்கு காரணமாக அமைகிறது. நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள், இனப்பெருக்க உறுப்பு பிரச்சனைகள், புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. பூச்சிக் கொல்லி மருந்துகளின் தீவிரம் மனிதர்களுக்கு நரம்புக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. சர்வதேச சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 13 – 19 வயதிலான குழந்தைகளுக்கு விவசாய நிலங்களை சுற்றி இருப்பவர்களுக்கு மூளைக் கோளாறு ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

21000 பூச்சிக்கொல்லி விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் படி பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தியவர்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை உட்கொண்டவர்கள் தீவிர மனச் சோர்வை கொண்டவர்களாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி,குளோர்பைரிஃபோஸின் வெளிப்பாடு காரணமாக 20 குழந்தைகளின் பெருமூளைப் புறணி தாயின் வயிற்றிலயே பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தை பயிர்கள், கட்டிடங்கள் மற்றும் விலங்குகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மற்றொரு வெளியிடப்பட்ட ஆய்வு பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு மன நல கோளாறுகள், மன இறுக்கம், கவனக் குறைவு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளனர்.

பூச்சிக் கொல்லி மருந்துகளால் பர்கின்சன் நோய் வருகிறது. விவசாய பகுதிகளில் வாழ்பவர்களுக்கு, அங்குள்ள தண்ணீரில் மருந்து கலப்பு இவற்றால் பர்கின்சன் நோய் ஏற்படுகிறது.

இந்த செயற்கை உரங்கள் விவசாய நிலங்களை பாதிப்பதோடு சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு விளைவிக்கிறது. எனவே மக்களுக்கும், இயற்கைக்கும் தீங்கு விளைவிக்காத வழிகளை கையாளுவதே சிறந்தது. பயிர் சுழற்சி முறைகள் பல்வகைப்பட்ட நடவு முறைகள் மக்கும் பூச்சி உரங்கள் பூச்சிகளை பிடிக்க பொறி தாவர முறைகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இயற்கைக்கும் நமக்கும் தீங்கு விளைவிக்காத முறைகளே நல்லது. அதையே பின்பற்றி பயன் பெறுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here