அரசுப் பள்ளிகளில் சமீபகாலமாக குறைந்துவந்த மாணவர் சேர்க்கை அரசின் விழிப்புணர்வு முயற்சிகளால் நடப்பு ஆண்டில் 1.7 லட்சம் உயர்ந்துள்ளது.

இந்த எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு 40,000-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் இயங்கின.

அதில் 68 லட்சம் மாணவர்கள் வரை படித்து வந்தனர். அதன்பின் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி, ஆங்கில கல்வி மோகம், முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்தது.

இப்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 1,248 தொடக்கப் பள்ளிகளில் பத்துக்கும் குறைவான மாணவர்களே படிக்கின்ற
னர்.மாணவர் சேர்க்கை குறைவதால் அரசுப் பள்ளிகள் இணைப்புநடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் அரசுப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்து பரவலாக அச்சங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இதுவரை 1.7 லட்சம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறும்போது, ”கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் 37,459 அரசுப் பள்ளிகளில் 44 லட்சத்து 13 ஆயிரத்து 336 மாணவர்கள் படித்தனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இதுவரை 45.83 லட்சமாக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 1.7 லட்சம் அதிகமாகும்.

மாணவர் சேர்க்கை விவரங்களை பெரும்பாலான பள்ளிகள் ‘எமிஸ்’ இணையதளத்தில் இன்னும் முழுமையாக பதிவேற்றவில்லை

. மேலும், அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடத்தலாம். எனவே, இந்த எண்ணிக்கை 2.2 லட்சத்தைத் தாண்டும்.

இதேபோல், 2018-19-ம் கல்வி ஆண்டில் 8,357 அரசு உதவி பள்ளிகளில் 22 லட்சத்து 31 ஆயிரத்து 88 மாணவர்கள் படித்தனர். நடப்பு ஆண்டில் 22.70 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இதுதவிர கடந்த ஆண்டு 12,918 தனியார் பள்ளிகளில் 64 லட்சத்து 81 ஆயிரத்து 598 பேர் படித்தனர். இந்த ஆண்டு 62.8 லட்சம் வரையே சேர்க்கை உள்ளது.

அதாவது மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் குறைந்துள்ளது.
தமிழகத்தில் மற்ற துறைகளைவிட பள்ளிக்கல்விக்குத்தான் அதிகநிதி ஒதுக்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு, மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி உட்பட 14 வகையான இலவசப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கல்வி உதவித்தொகைத் திட்டங்களும் அமலில் உள்ளன. மேலும், தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில்தான் கல்வித்
தரமும் நன்றாக உள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் பலர் இன்று முக்கிய துறைகளில் கோலோச்சுகின்றனர். எனினும்,
ஏழை மக்கள்கூட கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் சூழல் நிலவுகிறது.

இதைத் தவிர்க்க முடிவு செய்து தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்
தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பெற்றோரின் ஆங்கில மோகம் காரணமாக அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

ஆங்கில வழி வகுப்பு
களும் அதிகரிக்கப்பட்டன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர்கள் சீருடையின் நிறம், தரம் மாற்றப்பட்டன. இப்போது காலணிக்கு பதில் ஷூ வழங்கவும் முடிவாகியுள்ளது.

இதுதவிர பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன்பலனாக மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது.

 இதை மென்மேலும் பலப்படுத்த அரசின் உதவியுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றனர்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பிரதீப் யாதவ்கூறும்போது, ”சமீப ஆண்டுகளாக தொடர் சரிவில் இருந்த மாணவர் சேர்க்கையை மறுபடியும் மீட்டுள்ளோம். அரசுப் பள்ளிகள் மீதான எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க
நிகழ்வாகும்.

அரசுப் பள்ளிகள் மக்கள் நலனுக்காகத்தான் செயல்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் ரூ.28 ஆயிரம் கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கி தகுதியான ஆசிரியர்கள் மூலம் இலவசமாக கல்வி கற்றுத் தரப்படுகிறது. இதை சாதாரண மக்கள் உணர்ந்து அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்து தங்கள் பிள்ளைகளை சேர்க்க முன்வர வேண்டும்” என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here