வயிற்றின் மேற்பகுதி, நெஞ்சு இவற்றில் நெருப்பு போல் எரிச்சல் தாங்கவில்லை என அநேகர் கூறுவர். இதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.

வயிற்றில் உள்ள அமிலம் மேலேறி உணவுக் குழாய்க்கு வரும் பொழுது உணவுக்குழாயின் உள் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. கார மசாலா உணவுகளே நெஞ்செரிச்சலுக்கு முக்கிய காரணம் ஆகின்றன.

சில வலிநிவாரண மாத்திரைகளால் நெஞ்செரிச்சல் உண்டாகலாம். அதனால்தான் இந்த மாத்திரைகளை உணவுக்குப் பின்பே மருத்துவர் பரிந்துரைப்பார்.

ஆல்கஹால் போன்ற பிரிவுகள் வயிற்றில் ஆசிட் சுரப்பினை அதிகம் கூட்டி விடுவதன் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படலாம். புகை பிடித்தலும் மேற்கூறிய காரணத்தினைப் போன்றதே. இவைகள் உணவுக்குழாயினையே வலுவிலக்கச் செய்துவிடும்.

கர்ப்ப காலத்தில் கீழ் வயிற்றில் ஏற்படும் அழுத்தத்தால் அஜீரண கோளாறு மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

அதிக உணவு உண்ணாதீர்கள். சிலர் சாப்பிடும் பொழுது அதிகமாக சாப்பிடுவார்கள். பிறகும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு உணவுக்குழாய் சதைகளே பலவீனமாகிவிடும். இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் எப்பொழுதும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும்.

தீர்வுகள்:

நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு ஹிலிகோபாக்டர் பைலோரியா என்னும் பாக்டீரியம், எரிச்சலை ஏற்படுத்தும் அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கிறது. எனவே கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், அந்த பாக்டீரியா அழிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் தடைபடும்.

இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், நெஞ்செரிச்சலை தடுக்கலாம்.

வாழைப்பழத்தில் ஆன்டாசிட்கள் உள்ளன. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.

சாக்லேட் அதிகம் சாப்பிடாமல் இருப்பது, டீ-காபி அதிகம் அருந்தாமல் இருப்பது, ப்ரைடு உணவுகள், காரம் மற்றும் மசாலா வகை உணவுகளை தவிர்ப்பது, அமிலம் இருக்கும் உணவை (சிட்ரஸ், கால்சியம்) உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. கூடியவரை இரவு நேரத்தில், இவற்றை அறவே தவிர்த்தல் நல்லது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here