இன்றைய செய்திகள்

25.07.2019

* மருத்துவக் கழிவுகளை சரியாக கையாளாத மாநிலங்கள் மாதம் ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் : தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை.

* பல்வேறு பிரச்சினைகள், நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் க்ரோட்ரான் (Grotron) என்னும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார் கோவையைச் சேர்ந்த பெஞ்சமின் ராஜா(42).  துல்லிய விவசாயமும், புதிய தொழில்நுட்பமும் விவசாயத்தை லாபமீட்டும் தொழிலாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இவர்.

* தமிழகத்தில் பொறியியல் முதுலைப் படிப்பில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.

* ஜப்பான் ஓபன் பேட்மின்டன்: 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் சாய் பிரனீத்.

* சீனாவில் நடைபெற்ற காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டி: மதுரை மாணவி ஜெர்லின் அனிகா தங்கம் வென்று அசத்தல்

திருக்குறள்

அதிகாரம்:அருளுடைமை

திருக்குறள்:246

பொருள்நீங்கிப்பொச்சாந்தார் என்பர்அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகுவார்.

விளக்கம்:

அருளற்றவர்களாய்த்தீமைகளைச் செய்துவாழ்பவர்கள்,பொருளற்றவர்களாகவும்,கடமை மறந்தவர்களாகவும்ஆவர்.

பழமொழி

No man can serve two masters

ஆற்றிலே ஒருகால் ;சேற்றிலே ஒரு கால்வைக்காதே.

இரண்டொழுக்க பண்புகள்

  1. என்னால்இயன்ற அளவுமரக்கன்றுகள் நட்டுவளர்ப்பேன்.
  1. இயற்கைசமநிலைபேணிபாதுகாப்பேன்.அதற்காக என் பங்களிப்பைசெலுத்துவேன்.

பொன்மொழி

ஒருவன் வாழ்வில்முன்னேற்றம் அடைவதற்குஇரு கடமைகள் உள்ளன.அவை சுயநம்பிக்கைமற்றும் தொழில் பக்தி….

சுயநம்பிக்கை இல்லாதவன்தொழில்மேல்  பற்றற்றவன்ஆவான் ..

 

——-விவேகானந்தர்

பொது அறிவு

  1. இந்தியாவில்பருத்திநெசவாலைகள் அதிகம்உள்ள மாநிலம் எது ?

மகாராஷ்டிரா.

  1. இந்தியவெண்மைப்புரட்சியின் தந்தை என்றுஅழைக்கப்படுபவர் யார்?

வர்கீஸ்குரியன்(பால்பண்ணைமேம்பாட்டுத் திட்டவடிவமைப்பாளர், இவரதுசொந்த ஊர் கோழிக்கோடு,கேரளா)

English words & meanings

* Indigo plant – a plant gives blue dye. அவுரி செடி

  1. இந்தியாவில்கிடைக்கும்செடி என்று இண்டிகாஎன்று பெயர் பெற்றது.
  2. கருநீலவண்ண சாயம்இதிலிருந்துபெறப்படுகிறது.

* Impala – a wild animal in the family of deer. கிளைகள் அற்றகொம்பு உடைய மான்

  1. ஆப்பிரிக்காவில்காணக்கூடியது
  2. 2மீட்டர்உயரம் குதிக்ககூடியது.

ஆரோக்ய வாழ்வு

வெண்டைக்காய்குழந்தைகளின்நினைவாற்றலைஅதிகரிக்கும். மூளைவளர்ச்சிக்கும் ஏற்றது.

Some important  abbreviations for students

RJQ – Return Journey Quota

RLWL-  Running Line Waiting List

(Railway)

நீதிக்கதை

“ஊருக்கு வந்திருந்ததாத்தா, தினமும்மொட்டைமாடியில்படுத்துக்கொண்டு பேரன்அகிலேஷுக்கும் பேத்திஅவந்திகாவுக்கும் கதைகள்சொல்வார். அன்று சேமிப்புபற்றி ஒரு கதைசொன்னார். அதைக்கேட்டதும், ‘‘இனிமேநாங்களும் அப்பா, அம்மாகொடுக்கிற காசுலசேமிக்கிறோம்’’ என்றாள்அவந்திகா.

‘‘நாளைக்கே உண்டியல்வாங்கித் தரேன்’’ என்றார்தாத்தா.

 

மறுநாள் உண்டியலுடன்வந்த தாத்தாவைப்பார்த்தும், ‘‘என்ன தாத்தாஇது? மண் உண்டியல்.சூப்பர் மார்கெட்ல அழகழகாகார்ட்டூன் உண்டியல்இருக்கு தெரியுமா’’என்றான் அகிலேஷ்.

 “அதெல்லாம் பார்க்கமட்டும்தான் அழகு. இந்தமண் உண்டியல்சுற்றுச்சூழலுக்கும் அழகு.உடைஞ்சாலும் மண்ணோடுமண்ணாகும்’’ என்றார்.

புரிந்துகொண்ட இருவரும்மண் உண்டியலைமகிழ்ச்சியுடன்வாங்கிக்கொண்டனர்..

மாணவர்களே இந்தஅவந்திகா மற்றும்அகிலேஷ் போல நீங்களும்எதை செய்தாலும்சுற்றுச்சூழலுக்கு உகந்தகாரியங்களே செய்யவேண்டும்.

வியாழன்

 அறிவியல் & கணினி

அறிவோம் அறிவியல்

அறிவியல் மேஜிக்:தண்ணீரில் மிதக்கும் ஊசி!

கொசுக்களும் ஈக்களும்தண்ணீரில் சாதாரணமாகநின்று கொண்டிருப்பதைப்பார்த்திருக்கிறீர்களா?தண்ணீரில் அவைமூழ்காமல் எப்படிநிற்கின்றன? ஒருசோதனை செய்து பார்த்துவிடுவோமா?

என்னென்ன தேவை?

கண்ணாடி டம்ளர்

மெல்லிய காகிதம் (டிஷ்யூபேப்பர்)

ஊசி 2( ஜம்ப் கிளிப் )

எப்படிச் செய்வது?

 

# கண்ணாடி டம்ளரின்விளிம்புவரை தண்ணீரைஊற்றிக்கொள்ளுங்கள்.

# ஓர் ஊசியை எடுத்துதண்ணீரில் போடுங்கள்.ஊசி என்ன ஆனது?தண்ணீரில் மூழ்கிவிட்டதா?

# சரி விடுங்கள், இப்போதுஒரு துண்டு டிஷ்யூபேப்பரைக் கிழித்துதண்ணீரில் போடுங்கள்.

# டிஷ்யூ பேப்பர் மீதுஇன்னோர் ஊசியைவையுங்கள்.

# சற்று நேரத்தில் டிஷ்யூபேப்பர் நீரில்நனைந்துவிடும். நனைந்தபேப்பரைச் சிறியகுச்சியால் தண்ணீருக்குள்தள்ளிவிடுங்கள்.

(ஊசி மீது குச்சிப் படக்கூடாது.)

# பேப்பர் தண்ணீருக்குள்சென்ற பிறகு ஊசி மட்டும்மிதப்பதைப் பார்க்கலாம்.

காரணம்

நீரின் பரப்பு இழுவிசையேஊசி மிதந்ததற்குக்காரணம். நீர்மத்தின்ஓரலகுப் பரப்பில்உணரப்படும் விசையேபரப்பு இழுவிசை.

ஒரு நீர்மத்தின்உட்பகுதியில் உள்ளமூலக்கூறுகள் மற்ற எல்லாமூலக்கூறுகளாலும்எல்லாத் திசையிலும்சமமாகஇழுக்கப்படுகின்றன.இதனால் நீர்மப்பரப்பில்இறுக்கம் உணரப்படுகிறது.

இந்த இறுக்கத்தினால்மூலக்கூறுகள் தண்ணீரின்மேற்பரப்புக்கு வந்து சிறியபடலமாகப்படிந்துவிடுகின்றன.இதனால், ஊசி மிதக்கிறது.

கணினி சூழ் உலகு

அலைபேசியின் screen ஐமடிக்கணினியில் reflectசெய்து இயக்க உதவும் இருசெயலிகள் பற்றியகாணொலி

Today’s Headlines

* States that do not handle medical waste need to pay Rs 1 crore per month: National Green Tribunal warning.

* Benjamin Raja, from Coimbatore invented a new technology Grotron which will transform agriculture into a profitable industry.

* Applications for admission to the Engineering Post Graduate Entrance Examination in Tamil Nadu have started from yesterday.

* Japan Open Badminton: Sai Praneeth of India qualifies for 2nd round.

* Badminton Competition for the Deaf in China: Madurai student Jerlyn Anika wins gold.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here