இன்று உலகில் அதிகமானவர்களை பாதிக்கின்ற நோயாக சர்க்கரை நோய் இருக்கின்றது. சிறுவர்கள், இளைஞர் யுவதிகள், வயதானவர்கள் என யாரையும் விட்டு வைப்பதில்லை. இதற்கு என்ன தான் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் உணவே மருந்தாகிறது. உணவை கட்டுப் படுத்தாவிட்டால் நிச்சயம் சர்க்கரை நோயை முழுமையாக குணமாக்க முடியாது. இன்று சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என பார்க்கலாம். “சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய உணவுகள்” பீட்ரூட், கரட், இவற்றை அளவோடு சாப்பிடலாம், அதிகம் எடுத்துக் கொள்ள கூடாது. கொழுப்பு நீக்கப் பட்ட பால், கோழிக்கறி, முட்டையின் வெள்ளைக்கரு, ஆப்பிள், கொய்யா, பேரிக்காய், மீன் (வறுக்காமல்) ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, திராட்சை, பசும் பால், சாத்துக் குடி ,மோர், பாசிப்பயறு, சுண்டல், கடலை, முந்திரி, பாதாம், போன்றவற்றை சாப்பிடலாம்.

அதே போல் டீ காபி சாப்பிட வேண்டுமானால் அளவோடு குடிக்கலாம். இதனால் நிச்சயம் சர்க்கரை நோய் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும்.

அடுத்து “சாப்பிட கூடாதவை” தேங்காய், வேர்கடலை, உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, இனிப்பு வகைகள், ஈரல், பன்றிகறி, மாட்டுக் கறி, ஆட்டுக் கறி, எருமை பால், வெண்ணெய்,தயிர், வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம், முட்டையின் மஞ்சள் கரு,சிப்ஸ், வடை, போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகள்,

பேரீச்சை, தர்பூசணி, அன்னாசி பழம், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், பாண், நெய்பிஸ்கட், சீத்தாப்பழம், மிளகாய் சோஸ், பரங்கிக்காய், சேனைக்கிழங்கு போன்றவை உணவில் சேர்க்கவே கூடாது.இவற்றை உணவாக சேர்த்தால் நிச்சயம் சர்க்கரை நோய்க்கு நீங்கள் எத்தனை மருத்துவம் செய்தாலும் குறையாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கீரை வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்து. முடிந்த அளவு குளிர்பானம் குடிப்பதை தவிர்க்க வேண்டும் அது சுகர் ப்ரீ என்றால் கூட குடிக்க வேண்டாம்..!!

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here