இன்றைய காலத்தில் கண்டதையும் சாப்பிட்டு குண்டாவது போல் கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டு பற்களையும் கறை படிய வைத்துவிடுகிறோம். அன்றைய காலத்தில் பற்களில் கறைபடிந்து இருந்தால் அவர்கள் வெற்றிலை பாக்கு பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள் என கணித்து விடுவோம். ஆனால் இன்று வெற்றிலை பாக்கு பயன்படுத்தாதவர்களின் பற்களும் கறைபடிந்து தான் இருக்கிறது. இதற்கான காரணம் மது, புகயிலை, மற்றும் குளிர்பானங்கள், இனிப்பு வகைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். இதனை வீட்டில் இருந்தபடி நீக்க ஒரு சூப்பரான டிப்ஸ் தான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். இதற்கு தேவையான பொருட்கள்:
கற்றாழை ஜெல் சிறிதளவு, தேங்காய் எண்ணெய் ஒரு கரண்டி, அரை கரண்டி பேக்கிங் சோடா. முதலில் கற்றாலை ஜெல்லை நன்றாக கரண்டியால் மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

அதில் தேங்காய் எண்ணெய், பேக்கிங் பவுடரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.இப்போது மருந்து ரெடி. இதனை ஒவ்வொரு நாளும் காலையில் பிரஷில் எடுத்து வழமை போல் பிரஷ் செய்து வாருங்கள். மாலையில் பேஸ்ட் பயன்படுத்தி பிரஷ் செய்யுங்கள். இதனை 10 நாட்கள் செய்தாலே போதுமானது. பற்கள் வெள்ளையாகிவிடும்..!!

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here