ஒரு நாளை புத்துணர்வோடு துவங்க நிச்சயம் உங்களுக்கு காபி தேவைப்படும்.  காபியில் கஃபைன் இருப்பதால் உங்கள் மூளையை சுருசுருப்பாக்கி உற்சாகமாக செயல்பட வைக்கிறது.  இந்த கஃபைன் உங்களை அடிமையாக்கி விடுவதுடன் மீண்டும் மீண்டும் அருந்த சொல்லி தூண்டும்.  இந்த கஃபைன் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் தன்மை கொண்டது.  நாள் ஒன்றுக்கு எத்தனை முறை காபி குடிக்கலாம் மற்றும் கஃபைனின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம். 

 உடல் ஆரோக்கியம் சீராக இருப்பவர்கள் ஒரு நாளுக்கு மூன்று கப் காபி குடிக்கலாம்.  அதாவது நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் கஃபைன் எடுத்து கொள்ளலாம்.  ஒரு கப் காபியி 95-100 மில்லிகிராம் கஃபைன் இருக்கிறது.  உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டுமென்றால் நாள் ஒன்றிற்கு இரண்டு கப் காபி குடிக்கலாம்.  சிலர் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடாமல் அடிக்கடி காபி குடித்து கொண்டே இருப்பார்கள்.  இதனால் உடலில் நீரிழப்பு, அசிடிட்டி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் குடல் நோய் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். 

anxiety 625

 நீங்கள் எவ்வளவு காபி குடிக்கிறீர்களோ அவ்வளவு கஃபைனை நீங்கள் உட்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.  இதனால் அஜீரணம், சோர்வு, தூக்கமின்மை, சீரற்ற இருதய துடிப்பு, பதட்டம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தலைவலி போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும்.  அதனால் காபி குடிப்பதை குறைத்திடுங்கள் அல்லது தவிர்த்திடுங்கள். 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here