ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம் திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடத்தப்படும் 3 பட்டயப் பயிற்சிகளில் சேர ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் வெ.நந்தகுமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
 திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி, கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் என்ற 3 சான்றிதழ்களுடன் கூடிய பட்டயப் பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சியில் சேர 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, முதல்வர், திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், நெ.204, திண்டிவனம் சாலை, திருவண்ணாமலை-606611 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04175-254793, 9841139836, 9788628262 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here