குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி உடற்பயிற்சி, நீராகாரங்கள் ஆகியவற்றை பின்பற்றி வந்தால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க முடியும். 

இரத்த அழுத்தம் சீராக இல்லாவிட்டால் எப்போதுமே பிரச்சனை தான்.  உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களை காட்டிலும் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அதீத அக்கறை செலுத்துவது நல்லது.  குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளலாம்.  நிறைய தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கலாம்.  குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அவ்வப்போது தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும்.  

தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் இருதய தசைகள் பாதுகாக்கப்படுகிறது.  விண்வெளி பயணங்கள் மேற்கொண்டவர்களிடம் ஆர்தோஸ்டாடிக் இண்டாலரன்ஸ் தன்மைக்கான பரிசோதனை நடத்தப்பட்டது.  அதில் நான்கு பெண்களும், எட்டு ஆண்களும் கலந்து கொண்டனர்.  கலந்து கொண்டவர்களின் இரத்த அழுத்தம் மற்றும் இருதய ஆரோக்கியம் சீராக இருக்கிறதா என்பதை கண்டறிய அவர்களின் விரல்களில் கஃப் மாட்டப்பட்டது.  இந்த பரிசோதனை அவர்களின் பயணத்திற்கு முன், பின் மற்றும் பயணத்தின் போதும் நடத்தப்பட்டது.  

அதில் தினசரி ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேற்பட்டு உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்படவில்லை என்பது தெரிய வந்தது.  குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி உடற்பயிற்சி, நீராகாரங்கள் ஆகியவற்றை பின்பற்றி வந்தால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க முடியும். 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here