தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு:

சவூதி அரேபிய நாட்டில் ரியாதிலுள்ள முன்னணி மருத்துவமனைக்கு 35 வயதிற்கு உட்பட்ட இரண்டு வருட பணி அனுபவமுள்ள பிஎஸ்சி, டிப்ளமோ  படித்த ஆண், பெண் செவிலியர்கள்  மற்றும் பி.எஸ்.சி படித்த டெக்னிசியன்ஸ்    தேவைப்படுகிறார்கள்.

 மேலும் எம்எஸ்சி, பிஎச்டி பட்டம்  பெற்ற நர்சிங் சூப்பர்வைசர், இன்பேக்சன் கன்ரோல், குவாலிட்டி கன்ரோல், தலைமை செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

ஊதியம் மற்றும் பணி விவரங்களை  அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.com மூலமாகவும் அல்லது 044-22505886, 22500417, 8220634389, 9566239685 என்ற தொலைபேசி எண்களிலும்  அறிந்து கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அனுபவத்திற்கேற்றவாறு மாத ஊதியம், இலவச விமான டிக்கெட், உணவுப்படி, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் சவூதி அரேபிய நாட்டின் சட்டத்திட்டத்திற்குட்பட்ட  இதர சலுகைகள் வழங்கப்படும்.

எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்களை www.omcmanpower.com/nurse/nurse.php என்ற அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதள இணைப்பில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here