) பனம் பழத்தை தொடர்ந்து சாப்பிட உடல் ஆரோக்கியம் பெறும். மிகவும் ஊட்டச்சத்து மிக்கது

2) உலர்ந்த வல்லாரைக் இலைப்பொடியில் நல்லெண்ணெய் சேர்த்துச் சாதத்துடன் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகும்.

3) பேரீச்சம் பழம் இரண்டை தினசரி சாப்பிட்டு பின்பு பால் குடித்து வந்தால் குளுக்கோஸ் நேரடியாக கிடைத்து உடல் ஆரோக்கியம் பெறும்.

4) கரிசலாங்கண்ணி இலை மற்றும் பருப்புக்கீரை இரண்டையும் தனித்தனியாக அரைத்து சாறு எடுத்து பிறகு ஒன்றாக கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் சோர்வு குறைந்து நோய் வராமல் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

5) உடல் ஆரோக்கியம் பெற, வில்வப்பழத்தின் சதைப்பகுதியைச் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால் குடல் சுத்தமாகும்.

6) உடல் ஆரோக்கியம் பெற, விளாப்பழ மரத்தின் பட்டையைக் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல், மண்ணீரல் சம்பந்தமான நோய்கள் குறையும்.

7) முருங்கை ஈர்க்குவை ரசம் வைத்து சாப்பிட்டு வர உடல் அசதி,கை கால் வலி
நீங்கி, உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here