சைனஸ் அறிகுறிகள்:

• அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, தலைவலி ஆகியவை சைனஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்.

முகம் கனமாகத் தெரியும். கண்ணுக்குக் கீழே, கன்னம், முன்நெற்றி ஆகிய இடங்களைத் தொட்டால் வலி ஏற்படும்.

• தலையைக் குனிந்தால் தலை பாரம் அதிகரிக்கும். இவற்றுடன் காய்ச்சல், தொண்டையில் சளி கட்டுவது, இரவில் இருமல் வருவது, உடல் சோர்வு.

• பற்கள்கூட வலிக்கலாம். மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கட்டியான மூக்குச் சளி வெளியேறும். சைனஸ் பாதிப்பு நீடித்தால், சளியில் துர்நாற்றம் வீசும். வாசனை தெரியாது, ருசியை உணர முடியாது.

* எந்தப் பொருளையும் குனிந்து எடுக்க முடியாது. குனிந்தால், தலை வலிக்கும்

• சைனஸ் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை:
குளிர்பானங்களைக் குடிக்கவே கூடாது. பனியில் அலையக் கூடாது. புகைபிடிக்கக் கூடாது. புகையுள்ள இடங்களில் வசிக்கக் கூடாது. மூக்குப்பொடி போடக் கூடாது. அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது. மூக்கைப் பலமாகச் சிந்தக் கூடாது. விரல்களால் அடிக்கடி மூக்கைக் குடையக் கூடாது.

• மூக்கடைப்பைப் போக்கும் இன்ஹேலரை அடிக்கடி பயன்படுத்தக் கூடாது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here