*புதியதலைமுறை*
*கல்வியாளர்கள் சங்கமம்* இணைந்து நடத்திவரும்
*மாண்புமிகுமாணவனே* நிகழ்வானது
சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி
*இராமநாதன் செட்டியார் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில்* நடைபெற்றது.

*சர்வதேச தரச்சான்று பெற்ற அரசுப்பள்ளி என்பதற்கான அடையாளத்தோடு* கம்பீரம் குறையாத அப்பள்ளியில் *மாணவர்களுக்கான நிகழ்வு* என்னும் பெருமையோடு நிகழ்வைத் தொடங்கினோம்.

*மாவட்ட கல்வி அலுவலர் முனைவர். சாமி சத்தியமூர்த்தி* அவர்கள் தலைமையுரையோடு அசத்தலாக தொடங்கிய இந்நிகழ்வில் *புதியதலைமுறை முதன்மை மேலாளர் இளையராஜா* அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்.

நிகழ்வில் சிறப்புரையாற்ற வருகை தந்திருந்த *எனது ஆசிரியரும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தை உலகத்தரத்திற்கு உயர்த்தி, இந்திய அளவில் சிறந்த அரசுப் பல்கலைகழகமாக உயர்த்திக் காட்டிய மேனாள் துணைவேந்தர் முனைவர்.சுப்பையா* அவர்களின் அசத்தலான கலந்துரையாடலில் வியந்தது மாணவர் அரங்கம்.

*எனது ஆசிரியர் என்று ஒவ்வொரு மேடையிலும் சதிஷ்குமார் சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் இன்று சிகரம்சதிஷ்குமாராய் உயர்ந்து நிற்கும் அவரை, எனது மாணவர் என்று ஒவ்வொரு மேடையிலும் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன்* என எனது ஆசிரியர் வாயால் நான் சொல்லக் கேட்டது, எனது பிறப்பின் பயனாக இருந்தது.

நிகழ்வில் வரவேற்றுப்பேசிய மாணவர் எண்ணிக்கையை நான்கு ஆண்டுகளில் *218 லிருந்து 1325 க்கு மாற்றிக்காட்டிய தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா* பெற்றோர்களின் பெருமையையும், ஆசிரியர்களின் ஒத்துழைப்பையும் வெகுவாகக் கொண்டாடி மகிழ்ந்தார்.

விழாவின் நாயகர்களான மாணவர்களுடனான கலந்துரையாடலில் மலைத்துப் போனோம்.
*என்னவொரு அறிவார்ந்த ஆளுமைகளை உருவாக்கி இருக்கின்றனர் ஆசிரியப்பெருமக்கள்.*

மாணவர்களுக்கு வாய்வலிக்கப் பதில் சொல்லியும்,
கைவலிக்க ஆட்டோகிராப் போட்டும்,
நினைவில் நீங்காமல் நிறைந்த நாளாக தடம் போட்டது இந்நாள்…

உடனிருந்து நிகழ்வை ஒருங்கிணைத்த கல்வியாளர்கள் சங்கம நண்பர்கள்
கனவு ஆசிரியர் கணேசன்,
சகோதரி முருகேஸ்வரி,
முனைவர்.ஸ்டீபன்மிக்கேல்ராஜ் மற்றும் புதியதலைமுறை நண்பர்கள் ஆகியோரது ஒத்துழைப்பையும் போற்றத்தக்கது..

தொடரும் பயணம்…

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here