பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க இருக்கும் மாணவர்கள் இணையதள பதிவின்போது பெறும் பயனீட்டாளர் எண், கடவுச் சொல் விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வில் முறைகேடு நடைபெறுவதாகவும், மாணவர்களுக்குத் தெரியாமலேயே குறிப்பிட்ட சில தனியார் கல்லூரிகளை அவர்கள் தேர்வு செய்ததாக ஆன்-லைன் கலந்தாய்வு வலைதளம் காட்டுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், ஒரு சில மாணவர்கள் தங்களுடைய பயனீட்டாளர் எண், கடவுச் சொல் விவரங்களை, அறிமுகம் இல்லாத நபர்களிடம் பகிர்ந்ததால், இந்தப் பிரச்னையில் சிக்கியிருப்பதாகவும் கூறப்பட்டது

.இதுதொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொறியியல் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது முற்றிலும் தவறான தகவல். ஆன்-லைன் முறையில் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் எந்தவித முறைகேட்டுக்கும் இடமில்லை.

பொதுவாக மாணவர்கள் இணையதள பதிவின்போது பெறும் பயனீட்டாளர் எண், கடவுச் சொல் ஆகிய விவரங்களை யாருடனும் பகிரக்கூடாது.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, சான்றிதழ் சரிபார்ப்பின்போது இதுதொடர்பான உறுதிமொழிப் படிவத்தில் மாணவர், பெற்றோரிடம் சான்றொப்பமும் பெறப்படுகிறது. அதன் பிறகும் சில மாணவர்கள், இதைப் பின்பற்றாமல் தங்களுடைய விவரங்களை பிறரிடம் பகிர்ந்து, ஏமாறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

மாணவர்கள் இதுதொடர்பான புகாரை 044 – 22351014, 22351014 ஆகிய எண்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here