அறிக்கை
18.07.2019
~~~~~~~~~~

நடிகர் சூரியா சிவக்குமார்

அவர்கள் புதியக் கல்விக் கொள்கை வரைவிற்கு எதிராக கருத்துத் தெரிவித்தமைக்கு முழு ஆதரவைத் தெரிவிக்கிறது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
=============

புதியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழர்கள் நலனுக்காக குறிப்பாக கிராமப்புற ஏழை மாணவர்கள் இதில் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதில் அழுத்தமாக குரல் கொடுத்தமைக்கும் ஓராசிரியர் ஈராசிரியர் பள்ளிகளை இணைப்பு என்ற பெயரில் கிராமங்களில் உள்ள தொடக்கப்ப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு தனியார் பள்ளிகளை அதிகப்படுத்த உதவுவதாக இருக்கிறது, கிராமங்களில் அரசு பள்ளிகளே இல்லாத ஒரு சூழ்நிலை உண்டாகும், பல கிலோமீட்டர் தொலைவில் சென்று படிக்கின்ற ஒரு கட்டாயம் ஏற்படும், இந்த சூழ்நிலையில் பெற்றோர்கள் தான் கட்டப்பட்டாவது பிள்ளைகளை பக்கத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் சேற்க நினைப்பார்களே தவிர்த்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க நினைக்க மாட்டார்கள், பள்ளிகள் அனைத்தும் தனியாரிடம் போய்விடும் என்பதை அறிந்தும்

தொடக்கப் பள்ளிகளில் மும்மொழி கொள்கை கொண்டுவருதால் முற்றிலும் தமிழ் அழியும் ஒரு சூழ்நிலை ஏற்படும், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஆணித்தரமாகத் தெள்ளத் தெளிவாக எடுத்து சொல்லிருப்பது நடிகர் சூரியா அவர்கள் தமிழ் மீதும் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் மீது வைத்திருக்கும் அக்கறை காட்டுகிறது

தழிழின் மீதும் ஏழை கிராமப்புற மாணவர்கள் மீதும் அக்கறையுடன் வேதனையை வெளிப்படுத்திய நடிகர் சூரியா சிவக்குமார் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நன்றியையும் ஆதரவுத் தெரிவித்துக் கொள்கிறது

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here