ராட்சசி’ படத்தை தடை செய்ய வேண்டும்,” : தமிழ்நாடு அரசு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன்

‘அரசு பள்ளி ஆசிரியர் சமுதாயத்தை அவதுாறாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள நடிகை ஜோதிகாவின் ‘ராட்சசி’ படத்தை தடை செய்ய வேண்டும்,” என தமிழ்நாடு அரசு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சமீபத்தில் வெளியான ‘ராட்சசி’ திரைப்படம் அரசு பள்ளிகளையும், ஆசிரியர்களையும் எவ்வித ஆதாரமுமின்றி மோசமாக காட்சிப்படுத்தி, வணிக நோக்கில் திரையிடப்பட்டுள்ளது. அதில் அரசு பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகள், மாணவர் எண்ணிக்கை குறைவு, அடிப்படை வசதிகள் இல்லாதது போன்ற அனைத்திற்கும் ஆசிரியர்களே காரணம் என்பது போன்று, உண்மைக்கு புறம்பான தகவல்களை திரைப்படம் மூலம் மக்களிடம் பரப்புகின்றனர்.மக்களிடம் அரசுப்பள்ளிகள் மீது முழு நம்பிக்கை ஏற்படுத்த அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில், அவற்றை தகர்க்கும் படி பொய்யான தகவலை பரப்பும் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கல்வியாளர், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய கல்வி கொள்கை வரைவு வெளியாகி 2 மாதங்களுக்கு பின் நடிகர் சூர்யா திடீரென அதுபற்றி பேசி கைதட்டல் வாங்கியிருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. வரைவு அறிக்கை பற்றி பல்வேறு கேள்வி எழுப்பிய அவர், தன் மனைவி ஜோதிகா நடிப்பில் வந்துள்ள ‘ராட்சசி’ திரைப்படம் பற்றி வாய் திறக்காதது படத்திற்கான சர்ச்சையை திசை மாற்றுவதற்கு தான் என தெரிகிறது. தன் மனைவிக்கான இமேஜ் மற்றும் வணிகம் பாதிக்காமல் சரியான நேரத்தில் வாய் திறந்திருப்பது சாமார்த்தியம் மட்டுமின்றி, அப்பட்டமான சினிமாத்தனம்.ஆசிரியர்கள் பற்றிபொய் தகவல்இப்படத்தில் வெளியான ஆசிரியர் பள்ளிக்கு தாமதமாக வருவது, பள்ளியில் சேர வரும் மாணவரை சேர்க்க மறுப்பது, மாணவர்களிடம் ஜாதி பார்த்து பழகுவது என அனைத்தும் ஆதாரமற்ற தகவல்.பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆசிரியர்கள் தெருத் தெருவாய் அலைகிறோம். பல ஆசிரியர்கள் மாணவர்களின் பல்வேறு தேவையை தாங்களே சொந்த செலவில் பூர்த்தி செய்து தருகின்றனர். இச்சமூகம் 100 சதவீதம் புனிதமானது அல்ல. எங்கோ ஓரிடத்தில் உள்ள சிறு தவறினை ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையே தவறானதாக சித்தரிப்பது தான் கண்டிக்கதக்கது, என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here