குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்… – புதிய சட்டத்திருத்த மசோதா

மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2019 மசோதாவை இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால், புதிய சட்டப்படி, எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்
 

 
மோட்டார் வாகன (திருத்த) மசோதா 2019 மசோதாவை மக்களவையில் அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை அன்று தாக்கல் செய்தார்.
இந்தியாவில் 1939 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் முதன்முறையாக 1988 ஆம் அண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில்  சில மாறுதல் செய்யப்பட்டது.
அதன் பின்னர் கடந்த மோடி தலைமையிலான மத்திய அரசு சில மாறுதல்களை செய்து மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா 2017 ஆம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டது.
ஆனால் மாநிலங்களவையில் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது.
தேர்வுக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு மீண்டும் மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ஆனாலும் அப்பொழுதும் மசோதா நிறைவேற்றப்படவில்லை.
இந்தநிலையில், 2019 மோட்டார் வாகன (திருத்த) மசோதாவை மக்களவையில் அமைச்சர் நிதின் கட்கரி  தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சங்கள்
# ஆம்புலன்சுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
# லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம்,
# ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிப்பது
# ஓட்டுநர் உரிமம் காலவதியாகி ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்பதை ஒரு ஆண்டாக உயர்த்துவது.
# குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
# இன்சூரன்ஸ் நகல் இல்லாவிட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம்
# போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறுவோருக்கு ரூ.2 ஆயிரம்,
# அதிவேகமாக  வாகன ஓட்டினால்ரூ.1000 முதல் ரூ.2000,
# சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ1000
# ஹெல்மெட் அணியாமல் சென்றால் ₹1000/-
# 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. அவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனையோடு ரூ.25 ஆயிரம் அபராதம், வாகன பதிவை ரத்து செய்தும் தண்டனை விதிக்க புதிய சட்டத்திருத்த மசோதா வழிவகுக்கிறது.
# போக்குவரத்து விதி மீறும் வாடகைக் கார் சேவை நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
# வாகனங்களில் அதிக பாரம் ஏற்றினால் ரூ.20 ஆயிரம் அபராதம்
மேலும்
 
# சாலை விபத்தில் உயிர் இழப்பவர்களுக்கு, 5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைபவர்களுக்கு, 2.5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்படுள்ளது
இதுபோன்ற கண்டிப்பான அபராதத்தால் விபத்துக்களும், அதனால் பறிபோகும் விலைமதிப்பற்ற உயிர்களின் எண்ணிக்கையும் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here