முன்னணி சார்ட்டட் அக்கவுண்டன்சி நிறுவனத்தின் விகாஸ் வாசல் இது குறித்து கூறியதாவது:

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது தொடர்பாக பல்வேறு கட்டு கதைகள் உலா வருகின்றன. அதில் ஒன்னுதான், நிறுவனம் பார்ம் 16 கொடுத்து விட்டது மற்றும் வரியும் கழிச்சாச்சு அப்பம் இனி நாம வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்று பல நினைக்கின்றனர்.

 ஆனால் அது உண்மை இல்ல. சில இதர விதிமுறைகள் காரணமாக அவர்கள் கட்டாயம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஆண்டு வருமானம் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை (ரூ.5 லட்சம்) காட்டிலும் அதிகமாக இருந்தால் (கழிவுகளை சேர்க்காமல்) கட்டாயம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்

வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் வாயிலாக ஆதாயம் கிடைத்து வந்தாலோ அல்லது வெளிநாட்டு வங்கி கணக்கில் கையொப்பம் இடும் அதிகாரம் இருந்தாலும் எந்தவொரு இந்திய குடிமகனும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

2019 மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பின்படி, 2020-21 மதிப்பீடு ஆண்டு முதல் மேலும் பல பிரிவு மக்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

 ஒரு ஆண்டில் நடப்பு கணக்கில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

 மின்சார கட்டணமாக ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் செலுத்துபவர்களும் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம்.

இந்த நிதியாண்டில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்காக ரூ.2 லட்சத்துக்கு மேல் செலவு செய்பவர்களும்  வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here