தபால் துறை தேர்வில் தமிழ்உள்ளிட்ட பிற மாநிலமொழிகள்புறக்கணிக்கப்பட்டதற்குகடும் எதிர்ப்பு எழுந்தநிலையில், அந்த தேர்வைமத்திய அரசு ரத்துசெய்வதாகஅறிவித்துள்ளது.

தபால் துறையில் தபால்காரர், உதவியாளர்பணியிடங்களைநிரப்புவதற்காக கடந்தஞாயிற்றுக்கிழமைஎழுத்துத் தேர்வுநடத்தப்பட்டது. இதில் உள்ளகேள்விகள் இந்தி மற்றும்ஆங்கிலத்தில் மட்டுமேஇருந்தன. தமிழ் உள்ளிட்டமாநில மொழிகள்புறக்கணிக்கப்பட்டன.

இதற்கு கடும் எதிர்ப்புகிளம்பியது. குறிப்பாகதமிழகத்தில் அனைத்துக்கட்சிகளும் இந்தநடைமுறையை கடுமையாகஎதிர்த்தன.பாராளுமன்றத்திலும்இப்பிரச்சினைஎதிரொலித்தது.

 

இந்த பரபரப்பானசூழ்நிலையில், இன்றுபிற்பகல்மாநிலங்களவையில்பேசிய மத்திய மந்திரிரவிசங்கர் பிரசாத், கடந்தஞாயிற்றுக்கிழமை நடந்ததபால் துறை தேர்வுகள்ரத்து செய்யப்படும் எனஅறிவித்தார்.

தமிழ் உள்ளிட்ட பிராந்தியமொழிகள் அனைத்திலும்தேர்வு நடத்தப்படும் என்றும்அவர் உறுதி அளித்தார்.மேலும், இந்த விவகாரம்தொடர்பாகமாநிலங்களவையில்தாமதமாக விளக்கம்அளித்தமைக்காகவருத்தமும் தெரிவித்தார்.

முன்னதாக, இந்தவிவகாரத்தைதமிழகத்தைச் சேர்ந்தஎம்பிக்கள் பாராளுமன்றமாநிலங்களவையில்எழுப்பினர். தபால்துறைதேர்வில் தமிழ்புறக்கணிக்கப்பட்டதற்குகண்டனம் தெரிவித்ததுடன்,தேர்வை ரத்து செய்துவிட்டுதமிழ் உள்ளிட்ட பிற மாநிலமொழிகளிலும் தேர்வைநடத்தும்படிவலியுறுத்தினர்.

இததொடர்பாக மத்தியமந்திரி நாளை விளக்கம்அளிப்பார் எனதெரிவிக்கப்பட்டது. இந்தஉறுதிமொழியை ஏற்காதஅதிமுக உறுப்பினர்கள்தொடர்ந்து அமளியில்ஈடுபட்டதால் அவைநடவடிக்கைகள்பாதிக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here