உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை விரைவில் கரைக்கக் கூடிய உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாக ஒரு மாதத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்

கோழி நெஞ்சுக் கறி
கோழியின் நெஞ்சுக் கறியில் அதிக புரதம், குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு, விட்டமின் B3, B6 ஆகிய சத்துக்கள் உள்ளது. எனவே வாரம் ஒரு நாள் அல்லது 3 நாட்கள் என்று கோழியின் நெஞ்சுக் கறியை சாப்பிட்டு வந்தால் கொழுப்பு விரைவில் கரையும்.

தக்காளி
உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் தினமும் நிறைய தக்காளி சாப்பிடுவதுடன் தக்காளி ஜூஸ் அல்லது சூப் குடிக்க வேண்டும். இதிலுள்ள அசிடிக் அமில பண்புகள் குடலில் சேரும் கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகிறது.

இஞ்சி மற்றும் பூண்டு
இஞ்சி மற்றும் பூண்டு கலந்த உணவுகளை தினமும் 3 முறையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது சூப், ரசம் செய்து கூட தினமும் சாப்பிடலாம்.

வெள்ளைக் கரு
தினமும் 4-5 வெள்ளைக் கருவை மட்டும் அவித்து காலை மற்றும் இரவு உணவாக சாப்பிட்டு இதில் உள்ள விட்டமின் A நம் உடல் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

வெண்டைக்காய்
வெண்டைக்காயில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை உள்ளது. இதை உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஊறவைத்த வெந்தயம்
வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் அந்த வெந்தயத்தை மென்று சாப்பிட்டு பின் அந்த ஊறவைத்த நீரை குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் உடலிலுள்ள கொழுப்புகள் தானாகவே கரையும்.

கத்திரிக்காய்
வாரத்தில் 4 நாட்களுக்கு கத்திரிகாய் குழம்பு, பொறியல், கூட்டு என்று சாப்பிட்டு வந்தால் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு குறைக்கப்படும்.

பேரிக்காய்
பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்குவதைத் தடுப்பதுடன், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கிறது.

அவகாடோ
அவகாடோ பழங்கள் நம் உடலிலுள்ள கொழுப்பையும் கரைக்க உதவுகிறது. முக்கியமாக இது வயிற்றிலுள்ள கொழுப்பை கரைப்பதால், இப்பழத்தை வாரம் இருமுறை எடுத்துக் கொள்ளலாம்.

வெள்ளை பீன்ஸ்
உடலிலுள்ள கொழுப்புக்கள் விரைவில் கரைய வேண்டுமெனில் வெள்ளை பீன்ஸை தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முருங்கை இலைச்சாறு
முருங்கை இலை அதிக இரும்புச் சத்து கொண்டது. அத்துடன் கொழுப்பை கரைத்து உடல் இளைக்கவும் உதவுகிறது. தினமும் இருவேளையில் முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.

சீரகம்
1 ஸ்பூன் சீரகத்தை 3 வேளைக்கு சேர்த்து சாப்பிடலாம் அல்லது சீரகத்தை நீர் மோரில் கலந்தும் குடிக்கலாம். இந்த முறையை சரியாக பின்பற்றுவதன் மூலம் 3 மடங்கு உடல் கொழுப்பை எளிமையாக கரைக்கலாம்.

பொன்னாங்கன்னி கீரை
பொன்னாங்கன்னி கீரை கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே பொன்னாங்கன்னி கீரையை வாரத்தில் 3 நாட்கள் சூப் அல்லது சமைத்து சாப்பிடலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here