உடல் எடை குறையவும், கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் க்ரீன் டீ எந்த அளவிற்கு பயனுள்ளதோ அதே அளவிற்கு சரியான உடல் எடை உள்ளவர்கள் இதை அருந்துவது மோசமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதனால் சரியான அல்லது தனது உடல் எடையின் அளவிலிருந்து 5 அல்லது 10 கிலோ அதிகம் உள்ளவர்கள் கூட க்ரீன் டீயை அருந்தக் கூடாது. அதிக உடல் பருமன் உள்ளவர்கள் மட்டுமே இதை எடுத்துக் கொள்வது அவசியம்.உடல் மெலிந்தவர்கள் அல்லது சரியான உடல் எடையில் உள்ளவர்கள் க்ரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் உடல் மெலிந்தவர்கள் உடலில் தேவையற்ற கொழுப்பானது இருக்காது. ஆனால், இதை அறியாமல் அவர்கள் க்ரீன் டீயை தொடர்ந்து அருந்தும்போது அவர்கள் உடலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்களை க்ரீன் டீயில் உள்ள வேதிப்பொருள்கள் மொத்தமாக வெளியேற்றிவிடும். உடலில் கால்சியம் போன்ற சத்துகள் உறிஞ்சப்பட்டு எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். ஹீமோகுளோபின் அளவும் குறையத் தொடங்கும். எனவே, அதிக உடல் பருமன் உள்ளவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வரைமுறை உண்டு. அதேபோல் நீரிழிவுடன் அதிக உடல் பருமன் உள்ளவர்கள் உட்பட அனைவருமே மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே க்ரீன் டீ எடுத்துக் கொள்ள வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here